மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
அரசு கொறோனோ தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை, நாட்டில் மக்கள் செறிவாக வாழும் பல இடங்களில் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதனை விட பாதிக்கப்பட்டவர்களை மாவட்டம் விட்டு மாகாணம் விட்டு கடந்து சென்று தனிமைப்படுத்தும் முயற்சியினை அரசு கைவிட வேண்டும் கொறோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் அந்ததந்த மாவட்டங்களில் வைத்து மேற்கொள்ளப்படல் வேண்டும் மாறாக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களை இலக்கு வைத்து அரசு நகர்வதனை உடன் நிறுத்த வேண்டும் அந்தந்த மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என இனம் காணப்பட்டவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து பராமரிப்பு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் இதுவே அனைவருக்கும் பாதுகாப்பானது கூட இதில் எந்த இனத்தவர் என்பது முக்கியமல்ல நாட்டில் இவ்வாறான நிலை தொடரும் பட்சத்தில் அனைவருக்குமே ஆபத்தை ஏற்ப்படுத்தும்.
குறிப்பாக கிளிநொச்சியில் வசிக்கும் எனக்கு கூட எதிர்காலத்தில் தொற்று ஏற்ப்பட்டால் என்னையும் எமது மாவட்டத்தில் எத்தனை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி உள்ளது அங்கு முகாமை அமைத்து தனிமைப் படுத்துங்கள் இது மற்றவர்களுக்கு என்னில் இருந்து தொற்று பரவாமல் இருக்க உதவும் அதனை விடுத்து என்னை தென்னிலங்கையிலையோ அல்லது மக்கள் நடமாடும் பகுதியிலையோ தனிமைப்படுத்துங்கள் என்று நாம் அரசை கோரவில்லை எனவே இதனை அரசு புரிந்துகொண்ட நடக்க வேண்டும்.
2009 யுத்தம் முடிவடைந்த போது தமிழர் தாயகத்தில் இருந்தவர்களை இதே அரசு செட்டிகுளம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் முள்வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாமில் தனிமைப்படுத்தியது அதனால் இவை இந்த அரசுக்கு புதிதாக இருக்காது ஆகவே அண்மையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் அரசுக்கு படிப்பினையாக இருக்கும் தனிமை படுத்தல் முகாம்களில் இருந்து எத்தனை பேர் இதுவரை போதிய அறிவு இல்லாமலும் நோயின் தன்மை புரியாமலும் தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார்கள் ஆகவே முகாம்கள் மக்கள் செறிவுள்ள பகுதியில் இருந்தால் தப்பி சென்று ஏனையவர்களுக்கு நோயை பரப்பினால் யார் பொறுப்பு.
இது இனம் மதம் கடந்த தொற்று நோய் ஆகவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தயவு செய்து அந்தந்த மாவட்டத்திலையே நடமாட்டம் இல்லாத பகுதி உள்ளது அங்கு முகாமை அமைத்து தனிமைப் படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.