சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் என சீனாவின் சிஜிடிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை இரு நாடுகளும் பல விடயங்களில் யதார்த்தபூர்வமான ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என சீன ஜனாதிபதி இந்த உரையாடலின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு நாடுகளும் முக்கியமான ஒத்துழைப்பு திட்டங்களை முறையான விதத்தில் முன்னெடுக்கவேண்டும் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.புதிய பட்டுப்பாதை திட்டத்தை கூட்டாக கட்டியெழுப்புவதற்காக உயர் தர அபிவிருத்திக்காக இரு நாடுகளும் பாடுபடவேண்டும் என தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கைக்கு உறுதியான ஆதரவையும் உதவியையும் வழங்கும் எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இலங்கை மக்கள் கூடியவிரைவில் வைரசின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசிற்கு எதிரான சீனாவின் போராட்டத்தில் தக்க தருணத்தில் இலங்கை தக்கதருணத்தில் வழங்கிய ஆதரவிற்காக சீனா ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் முக்கிய பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதை உறுதிசெய்வதற்கு சீனாஇலங்கை;கு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்