அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில், இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரணை பிரதேசத்தில் மாத்தளை வீதியில் நேற்று (08) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில், இவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் மேல் மாடியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அதிகவலு கொண்ட மின்சாரக் கம்பி அவர் மீது பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுஇது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.