மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்கண்டல் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுவை இறைச்சிக்காக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறைமாத பசு ஒன்று களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் இன்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.