எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளை திறக்க தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
திரையரங்குகளை திறப்பதற்கு முன்னர் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திரையரங்குகளுக்கு வருகை தருவோர் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து திரையரங்குகளும் கடந்த மார்ச் 14 ஆம் திகதி மூடப்பட்டன.