கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று அம்பேவல பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளதுகுறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் தடம்புரண்டமையால் பதுளையில் இருந்து கொழும்பு பயணிக்கின்ற புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளையும், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பயணிகளையும் சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் தடம் புரண்ட பகுதியில் இருந்து மாற்று வழியின் ஊடாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் தடம் புரண்டமையினில் 58,000 ஆயிரம் லீற்றர் எரிபொருள் விரயமாகியுள்ளதாகவும் தடம்புரண்ட பகுதியினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.