தற்போது சிகிச்சையில் 195 பேர் குணமடைந்த கடற்படையினர் 87729 கடற்படையினர் உள்ளிட்ட 36 பேர் குணமடைந்துள்ளனர்.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 36 பேர் குணமடைந்துள்ளனர்.
மடகஸ்காரிலிருந்து வந்து பெல்வெஹர உள்ளிட்ட இரு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 02 பேர், மாலைதீவிலிருந்து வந்து புனானையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் ஆகிய 03 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இன்று (03) இரவு 8.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,066 இலிருந்து 2,069 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,827 இலிருந்து 1,863 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (02) கட்டாரிலிருந்து வந்த 05 பேர், இந்தியாவிலிருந்து வந்த கப்பல் பணியாளர் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 05 பேர் ஆகிய 12 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.