இலங்கையின் எட்டாவது பாராளுமன்ற தரப்படுத்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 25 சிறந்த செயற்ப்பாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவில் இலங்கையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறந்த செயற்ப்பாட்டாளர் தரப்படுத்தலில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்ப்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஒன்பதாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்
இதுமட்டுமல்லாது இலங்கையில் உள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டாம் இடத்தையும் கட்சியின் தரப் படுத்தலில் முதல் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்இதற்கான வெற்றி பதக்கம் மற்றும் விருது என்பன தபால் மூலம் அனுப்ப பட்டு இன்று அவரது அலுவலகமான அறிவகத்தில் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது
சிறந்த பாராளுமன்ற செயற்பாட்டு உறுப்பினர் தெரிவு உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் , நீதி, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு என பல்வேறு பிரிவுகளில் மதிபெண் வழங்கப்பட்டே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இத் தெரிவின் உத்தியோக பூர்வ முடிவுகள் மற்றும் தரவுகள் மந்திரி டொட் எல் கே எனும் இனையத்தளத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது