கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக சமூகத்திற்குள் வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெலிகட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
அதன் பின்னர் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் புதிய 56 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிரிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. அவர் தனது வீட்டிற்கு சென்று திரும்பியர் என தெரியவந்துள்ளது. அதேபோல் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கைதிகளின் நலம் விசாரிப்பதற்கு நிலையத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.