நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினை கருதி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்று மாதகாலம் விடுமுறை வழங்கப்பட்டுயிருந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு உள்வாங்கபட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரனமாக பொதுமக்கள் மாதாந்தம் செலுத்தும் கொடுப்பனவுகளை ஆறுமாதத்திற்கு செலுத்த தேவையில்லையென அரசாங்கத்தினால் அறிவுருத்தல்களும் வழங்கப்பட்ருந்து இது இவ்வாறு இருக்க ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அருகாமையில் இயங்கி வருகின்ற தேசிய சர்வதேச பாடசாலையில் உள்ள மாணவர்களை மூன்று மாதத்திற்கான கொடுப்பணவு செலுத்தபடாமையினால் குறித்த மாணவர்களை பாடசாலை நிர்வாகம் பாடசாலையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தேசிய சர்வதேச பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் 12வரைமாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதிலும் ஒரு மாணவர் ஒருவருக்கு 2500ருபா முதல் 4500ருபாவரை பாடசாலை நிர்வாகம் அறவிடுவதாக பெற்றோர்கள் மேலும் குற்றம் சுமத்துவதோடு குறித்த பாடசாலையில் ஆசிரியர் பயிற்சியினை நிறைவுசெய்துகொண்ட தகுதியான ஆசிரியர்கள் இந்த பாடசாலையில் இல்லையெனவும் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் உயர்தரம் வரை கல்விகற்றவர்களே இங்கு இருப்பதாகவும் பாடசாலையில் மாணவர்களுக்கு ஏற்றவாறு எவ்வித வசதிகளும் அங்கு காணப்படுவதில்லையென பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மூன்று மாதகாலமாக பாடசாலை மூடப்பட்டு காணப்பட்டது. இது இவ்வாறு இருக்கின்ற போது நாம் எப்படி பணம் செலுத்துவது என பெற்றோர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.