கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த இராணுவ வீரர் கந்தகாடு இராணுவ நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியே நிலையிலே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார வைத்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய யு.கே சமிந்த குமார எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்ற நிலையிலே காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலே, கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அலுவலகம் அறிவித்ததுள்ளது.
அத்துடன் இராணுவ வீரர் தொடர்புகளை பேணிய, அவர் சென்ற இடங்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.