யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நேற்று நடமாடியுள்ளனர்.
இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியபோதே விரிவுரையாளரை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.