நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் கிளிநொச்சி தொகுதியில் போட்டியிடும் ஈபிடிபி முன்னாள் பா. மு. உறுப்பினர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து சுயேச்சைக் குழு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் கடமை நிலை அதிகாரிகளான பாடசாலை அதிபர்கள் வைத்தியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ; ஈபிடிபி முன்னாள் பா. மு. உறுப்பினர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து சுயேச்சைக் குழு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்தமை தொடர்பில் முன்னாள் ஓய்வு நிலைக்கல்விப் பணிப்பாளர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது யாழ் போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் த. சத்திய முர்த்தி அக்கராயன் ம.வி அதிபர் மதுர நாயகம் உதவிக்கல்விப்பணிப்பார் பிறேமா மதுரநாயகம் கிளி இந்துக்கல்லூரி அதிபர்களான விக்னராஜா பங்கையற்செல்வன் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர்களான ப. அரியரத்தினம் க. முருகவேள் ஓய்வு நிலை அதிகாரிகளான வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரடிப் போக்கு சந்தியில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிலையக் கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் செயல்பாடு குறித்து கலந்துரையாடி ஒர் அரசியல்வாதியின் வெற்றிக்காக செயல்படுவதாக முடிவெடுத்ததாக அக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுநிலை அதிகாரி இவ்வாறு பகிரங்க மேடையில் பெயர்களைக் கூறி உரையாற்றியுள்ளார்.
இதில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் முறையிடப்பட்டுள்ளது.இதில் உள்ளவர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு விண்ணப்பித்தவர்களாகவும் கானப்படுகின்றனர் என்பதன் அடிப்படையில் உடனடியாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துற்கு கொண்டு செல்லப்ப்டுள்ளது.