சிறிலங்கா: பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள லங்காபுர பிரதேச செயலகத்தில் பணிசெய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த செயலகம் இன்று வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டபிள்யூ.எஸ். குமாரவங்ச இதனைத் தெரிவித்தார்.
இதன்படி லங்காபுர பிரதேச செயலகத்திலுள்ள ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஊழியர் தற்சமயம் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.