கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரால் மிகவும் அர்ப்ணிப்புடன் உணவு, தங்குமிடம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படுகின்றது. இதனால் அதற்கு மரியாதை கொடுத்து செயற்படுங்கள் என இராணுவத்தினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
குழப்பம் ஏற்படுத்திய குழுவினரில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது உள்ளவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் அதனை தெளிவுப்படுத்தும் போது, அங்கிருந்தவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.