தற்போது நாட்டின் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியுள்ளதாக கருதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றி செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இததேவேளை தற்போது நிலவும் புதிய தொழிநுட்பத்திற்கமைய கொரோனா தொற்றினை பரிசோதிப்பதற்கு புதிய உபகரணம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான உபகரணங்கள் வழங்கப்பட்டால் குறைந்தளவான காலப்பகுதியில் பரிசோதனைகளை நிறைவு செய்ய முடியும் என குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் இருக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அழைத்து வரும் நடவடிக்கை கைவிடப்படவில்லை என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி டுபாய் நாட்டில் இருந்து 800 இலங்கையர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.