1

9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பதற்குச் சென்றுள்ளார்.
பொலிஸ் பாதுகாப்புடன் குடத்தனை அ.த.க வித்தியாலத்தில் இவர் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார்.
இதேவேளை ஏனையோரும் தமது வாக்கை பதிவுசெய்து வருகின்றனர்.
தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 05.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.