இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 213 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் மாலைதீவு மற்றும் துருக்கியில் இருந்து நாடுதிரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2890 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2666 ஆக உள்ளது.
தற்போது தொற்று உறுதியான இருவருடன் சேர்த்து தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது