செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

1 minutes read
A Message to Graduates: Here's the Best-Kept Secret

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மற்றும் யாழ்பபாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வடமாகாண அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம . ஆனந்தராஜா தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட குறித்த காரணங்களுக்கு அப்பால் அரச நியமனங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அனைத்துப்பட்டதாரிகளும் தார்மீக ரீதியிலான வேண்டுகோள் ஒன்றினை கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்குடன் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 

பல்வேறு தடைகள் தாமதங்களுக்கு மத்தியில் குறித்த கலந்துரையாடல் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேண்டுகோளினடிப்படையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு . திலீபன் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இக்கலந்துரையாடலில் அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட அனைத்துப்பட்டதாரிகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை றோயல் விருந்தினர் விடுதியில் அமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம . ஆனந்தராஜா தெரிவித்துள்ளதுடன் மேலதிக தகவல்களை 0777425286 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More