ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்“ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கன்னி அமைச்சவையில், 10,000 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து, வாகனத்தில் இருந்தபடியே சில வார்த்தைகள் பேசினார்.
10,000 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை எடுத்த முடிவை அறிவித்த ஜனாதிபதி, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்“ என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.