தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் காலமானார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவந்த சந்திரசேகரம் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றையநாள் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள, அவருடைய இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று, பின்னர் கொக்குத்தொடுவாய் இந்துமயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.