இலங்கையில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,959 ஆக உயர்த்தியுள்ளது.
எகிப்திலிருந்து இலங்கைக்கு வந்த இந்திய கடலோடி, இந்தோனேசியாவிலிருந்து திரும்பி வந்தவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த இருவர் மற்றும் சிங்கப்பூர் மற்றும் மாலைதீவில் இருந்து திரும்பிய தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்தவர்கள்.
இதேவேளை, இலங்கையில் மேலும் 06 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (24) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,811 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 136 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.