யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை,மற்றும் கோப்பாய் பிரதேச சபை களில் இருக்கின்ற வீதிப்போக்குவரத்து நடமுறையில் உள்ள முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாநகரமுதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் வீதிபோக்குவரத்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதே மாநகர முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைய காலப்பகுதியில் யாழ். குடா நாட்டில் முக்கியமான சந்திகளில் வீதிப்போக்குவரத்து ஊடாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது இதனை கட்டுப்படுத்தும் முகமாக வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் பணிப்பின்பெயரில் குறித்த நடவடிகை முன்னெடுக்கப்படவுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.