நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 2,995 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (29) ஆறு பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாட்டுக்கு வந்த நான்கு நபர்களும், பிரித்தானியா, லெபனானில் இருந்து திரும்பிய ஒருவருமாக இன்று 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி 136 நபர்கள் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
இன்று தொற்றிலிருந்து குணமடைந்த 7 பேர் வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2,849 ஆக உயர்ந்தது.
வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு பேரும், மினுவங்கொ் ஆதார வைத்தியசாலையிலிருந்து நான்கு பேரும், தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திலிருந்து ஒருவரும் வெளியேற்றப்பட்டனர்.