1

ஊவா மாகாண ஆளுநராக இன்று (திங்கட்கிழமை) ஏ.ஜே.எம்.முஸம்மில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்தோடு வடமேல் மாகாண ஆளுநராக ராஜ கொல்லுரே ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னர் வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும் ஊவா மாகாண ஆளுநராக ராஜ கொல்லுரேயும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.