புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அழிக்கப்படுவோம்

கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அழிக்கப்படுவோம்

2 minutes read

கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அழிக்கப்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள் தொன்மையான பூர்வீக நிலம் கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டுசெல்லப்படுகின்றனர் இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செய்யப்படாது . இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது . நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தனர்.

அதே போன்று 2020 நாடாளுமன்ற தேர்தல் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது கல்முனை மக்களுக்கு எதிராக கிடைத்த ஏமாற்றம் அல்ல இந்த நாட்டில் தொடராக அரசாங்கங்கள் இதனையே செய்து வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது இருப்புக்களை பாதுகாக்க இலட்சிய சிந்தனையோடு பயணிக்கின்றது . 2009 போராட்டம் மௌனிக்கப்பட்ட கையோடு 13வது திருத்த சட்டத்தில் கூடுதல் அதிகாரங்களை வழங்க போவதாக கூறிய அரசு 2020 ஆண்டில் 19ஐ நீக்கி 20 வது சீர்திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசு பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

இவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எந்த ஒரு நீதியையும் ஒருபோதும் தர போவதில்லை என குறிப்பிடுகின்றது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற கருணா வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து தமிழ் தரப்பில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதனை அறிந்தவுடன் எனது பணி நிறைவேறியது என வெளியேறினார்.

யுத்தம் நடைபெற்ற போது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர் தான் இந்த கருணா இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியை தான் குறிப்பிடுகின்றேன் என குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More