மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி உலர்ந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார், புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் குறித்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை சுமார் 335 கிலோகிராம் எடை கொண்டது என்பதுடன் சுமார் 11 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி குமார பல்லேவல மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் சாமர ராஜபக்ஷ தலைமையிலான மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரே இந்த நடவடிக்கையை மு்னனெடுத்தனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.