மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் இந்த அறிவிப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விடுத்துள்ளது.
அண்மையில் மத்துகம-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், அவருடன் அநுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.