கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதற்கமைய, 36′-00″ கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம் 29′-8.5″ அடியாகவும், 26′-00″ கொள்ளளவு கொண்ட கல்மடு குளம் 22′ – 10″ அடியாகவும், 25′-00″ கொள்ளளவு கொண்ட அக்ராயன் குளம் 22′ – 10″ அடியாகவும், 19′-00″ கொள்ளளவு கொண்ட புதுமுறிப்பு குளம் 18′ – 05″ அடியாகவும், 12′-00″ கொள்ளளவு கொண்ட பிரமந்தனாறு குளம் 09′ – 02″ அடியாகவும் உயர்ந்துள்ளது.
அத்தோடு, 10′-06″ கொள்ளளவு கொண்ட கனகாம்பிகை குளம் அடைவு மட்டத்தை அடைந்து 2″ வான் பாய்கின்றது. 10′-00″ கொள்ளளவு கொண்ட கல்மடு குளம் 09′ – 10″ அடியாக உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் 09′-06″ கொள்ளளவு கொண்ட வன்னேரி குளம் அடைவு மட்டத்தை அடைந்து 3″ வான்பாய்ந்து வருகிறது. 08′-00″ கொள்ளளவு கொண்ட குடமுருட்டிகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 2″ வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் குளங்களை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.