அங்கிகரிக்கப்படாத முகவர்கள் ஊடாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்வதால் சடலங்கலாக மீள திரும்பிய சந்தர்ப்பங்கள் இடம்பெற்றுள்ளன என பெண்கள் மறுவாழ்வு கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி கிளிநொச்சியில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அங்கிகரிக்கப்படாத முகவர்களின் ஊடாக பெண்கள் பிள்ளைகளைகளையும், உறவுகளையும் பராமரிப்பற்ற நிலையில் விட்டு தமது பொருளாதார நிலைகளிற்காக வெளிநாடுகளில் வேலை செய்து பல இன்னல்களை எதிர்கொள்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.குறிப்பாக அவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிற்கு வேலை வாய்ப்புக்களிற்காக சென்ற பெண்கள் சடலங்களாக திரும்பி வந்த சந்தர்ப்பங்கள் இலங்கையில் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதைவிட மேலாக அங்கு சித்திரவதைகளிற்குட்படுத்தப்பட்டு எஜமானன் எஜமானிகளால் சித்திரைவதைகள், துஸ்பிரயோகங்கள் என இன்னல்களை சந்தித்த மீள திரும்பிய மக்களிற்கு எங்கள் நாட்டில் அவர்களிற்கான பரிகாரமோ அல்லது அவர்களை மீண்டும் நல்நிலைப்படுத்துவதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசினாலோ அல்லது ஏனைய சமூகங்களினாலோ எந்தவித உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களின் தேவைகள், பிரச்சினைகளிற்காக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிற்கும் ஏனைய நாடுகளிற்கும் சென்று நாட்டுக்க திரும்ப முடியாதவாறு தவித்துக்கொண்டிருப்பதை அறிந்துகொண்டிருக்கின்றோம். இங்கே தவித்துக்கொண்டிருக்கின்ற அவர்களது உறவுகளிற்கும், பிள்ளைகளிற்கும் அவர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.
நாட்டுக்க மீள திரும்புவர்களிடம் தனிமைப்படுத்தலிற்கான செலவை பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளதை ஊடகங்கள் ஊடாக நாங்கள் பார்த்தள்ளோம். தமது காலங்கள் முடிந்து பல அசளகரியங்களோடு வாழ்கின்ற மக்கள் இலங்கைக்கு திரும்பி 14 நாட் களை நிறைவு செய்வதற்கு எமது நாட்டுக்கு அன்னிய செலாவணியை தேடிக்கொடுத்தம் அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். இதன் காரணமாக தொடர்ந்தும் பல பெண்கள் வெளிநாடுகளிலேயே தங்கியிருக்கின்றதையும் நாங்கள் அறிகின்றோம்.
இவ்வாறான விடயங்களை அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கவனத்தில் கொண்டு அவ்வாறான மக்களிற்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.