கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது.
இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேநேரம் குறித்த குழுவின் முடிவுகளின் பின்னர் இந்த விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரையில், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த 5 முஸ்லிம்களின் சடலங்கள் பாதுகாப்பதற்காக அதி குளிரூட்டப்பட்ட ஐந்து கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.