இதேவேளை நீர்பாசன குளங்கள் சில மீண்டும் வான்பாய ஆரம்பித்துள்ளது. அதனால் தாழ்நில பகுதியில் உள்ள மக்களை விழிப்புடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால் பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கனகாம்பிகைக்குளத்தின
கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலும் உள்ள மக்களையும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதியில் நீர் வருகை அதிகரித்துள்ளதால் இன்று பகல் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் உள்ள முரசுமோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கனை, ஊரியான், சிவபுரம், நாகேந்திரபுரம் உள்ளிட்ட தாழ் நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன்
செயல்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.