செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

1 minutes read

முஸ்லீம்களின் ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்பபு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆரப்பாட்டத்தில் ஜனாசாவை எரிப்பதற்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்க்பட்டு வரும் நிலையில் முஸ்லீம் மதத்தவர்கள் தமது உறவுகளின் உடல்களை தமது மத நடைமுறையின் படி புதைக்க வேண்டும் என கோர்க்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கு அரசாங்கத்தால் இதுவரை எதுவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையில் நாடு முழுவதிலும் ஜனாசா எரிப்பிற்கு எதிராக எதர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் இன்று கிளிநொச்சி இடம்பெற்ற போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள், மததலைவர்கள் இணைந்து ஜனாசா எரிப்புக்கு எதிராக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

ஜனாசா எரிப்பினை கைவிட்டு அரசாங்கம் இஸ்லாமியர்களின் மத அனுஸ்டானங்களிற்கு அனுமதி வழங்க வேண்டம் எனவும், உலக சுகாதார அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட வகையில் ஜனாசாவை அடக்கம் செய்வதற்கு ஏற்ற வகையிலான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவு்ம, அனைத்து மதங்களையு்ம, இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More