இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வருகின்றார்.
குறித்த சந்திப்பை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.