இலங்கையை சேர்ந்தவர் முகம்மது ரிஸ்வான் (38). வியாபார ரீதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவர் மரணமடைந்த செய்தியை, இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட உடன் முஹம்மது ரிஸ்வானின் தாயார் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயிலை தொடர்புகொண்டு அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் இலங்கை தூதரகம் மற்றும் காவல் துறை விசாரணை முடிந்தவுடன் இன்று (08-01-21) பிரேத பரிசோதனைக்கு பிறகுஎஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் துறைமுகம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஹார்பர் ஹாஜா, 56 வது வட்ட தலைவர் யாசர் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர், முஹம்மது ரிஸ்வான் உடலை இஸ்லாமிய முறைப்படி சென்னை ராயப்பேட்டை அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.