இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 8 ஆயிரத்து 46 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 814 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.