பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக கடந்த 18.02.2020 மாலை 7 மணியளவில் ரவிகரனது இல்லத்திற்கு நேரடியாக சென்ற மாங்குளம் பொலிஸார், இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்னும் பேரணியில் கலந்துகொண்டமைக்காக கடந்த திங்கட்கிழமையும் ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.