செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கின்றது மட்டக்களப்பு DreamSpace Academy!

சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கின்றது மட்டக்களப்பு DreamSpace Academy!

1 minutes read

ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) – இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது.

இந்த விண்வெளி செயற்றிட்டத்தில் இலங்கை இளைஞர்கள் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி இலங்கையில் வசதி குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு விண்வெளி ஆய்வகம் (Space Lab) உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வகங்களுக்கு (Advanced Multidiciplinary Labs) நிபந்தனையற்ற அணுகலுடன் திறன் வலுவூட்டல் செய்கின்ற ஒரு ஸ்தாபனமாகும்.

ரெட் கிலோவ்வின் (Red Clove) விதைகள் மற்றும் நைட்ரஜன் உருவாக்கும் பக்டீரியாக்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு தன்னிறைவான எக்ஸோலாப்பை (ExoLab) அனுப்புவதன் மூலம் உயிரினங்களில் மைக்ரோ கிராவிட்டி விளைவுகளை ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) அதன் முதல் விண்வெளி திட்டத்தில் ஆராய்கிறது.

இச்செயற்றிட்டமானது Cygnus NG-15 விண்கலம் மூலம் 20 பெப்ரவரி 2021 இலங்கை நேரப்படி இரவு 11.06 மணிக்கு வலலோப்ஸ் ஐஸ்லாந்து, விர்ஜினியா, அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

விண்வெளி மற்றும் பூமியில் நாற்றுகளின் வளர்ச்சியை ஒப்பிடுவதற்கு பூமியில் உள்ள அணிகள் மற்றும் விண்வெளியிலும் ஒரே நேரத்தில் பரிசோதனையை மேற்கொள்ளுவதோடு, ரெட் கிலோவ்வின் (Red Clove) மற்றும் ரைசோபியம் இடையேயான தொடர்பு பற்றி ஆய்வினையும், ISS இலிருந்து படங்களில் வேர் முடிச்சு மற்றும் தாவர வளர்ச்சியை அடையாளம் காண இயந்திர கற்றல் கருவியை உருவாக்கும் செயன்முறையில் ட்ரீம்ஸ்பேஸ் அகாடமியின் விண்வெளி ஆய்வகத்தின் கார்டியன் சம்ரத், குழு உறுப்பினர்களான ஃபாலில், அபிஷேத்வர்மன், ரிஷாந்தினி, மற்றும் அபிலாஜினி ஆகியோருடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ளளவுள்ளனர்.

இவ் ஆய்வு செயன்முறையில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் ஒரே ஒரு குழாம் டிரீம்ஸ்பாஸ் அகாடமி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More