சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
க.பொ.த தரப் பரீட்சை நடைபெற்ற கோட்டே ஆனந்த பரீட்சை மண்டபத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இந்த வியங்களை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.