இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏற்புடையதல்ல என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு ஒன்றை குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அந்த நாட்டின் இணக்கப்பாடு அவசியமானது எனவும் அவ்வாறு இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாடுகளின் மொத்த எண்ணிக்கை 25 ஐ விடவும் குறைவானது என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.