கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணியாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறாதொரு நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதில் தேல்வியடைந்துள்ளமையை மறைப்பதற்காக ரிஷாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.