கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் தகைமையான மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு இந்நிவாரண பொதி வழங்கப்பட உள்ளதுடன் அந்த பொதியில் 5,000 ரூபா பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. மூன்று தினங்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண பொதிகளை பெற்றுக்கொள்ள தகைமையுள்ள குடும்பங்களுக்கு அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் நிவாரணப் பொதிகள் பகிர்ந்த ளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.