0
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை இலங்கையில் 138,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 19,944 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.