0
எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.