முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையினையும் பெற்று வந்த நிலையிலேயே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 737 குடும்பங்களை சேர்ந்த 2,023 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது