இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணத்தடை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி,
*மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை.
*மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பேருந்தில் 50 வீதமானோர் பயணிக்க முடியும்.எனினும் மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும்.
*அனைத்து மாகாணங்களிலும் ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரம் வெளியில் சென்றுவர முடியும்.
*தனியார் அல்லது வாடகை வாகனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க வேண்டும்.
*அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குத் தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை அமைர்த்துவதற்கு அந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும்.
*குறித்த நிறுவனங்கள் வீடுகளில் இருந்து சேவையாற்றக் கூடிய வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நிறுவனம் சார் கூட்டங்களில் பத்துப் பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும் என்பதுடன் மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதி இல்லை.
*மேல் மாகாணம் தவிர ஏனைய பகுதிகளில் 25 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த அனுமதி. மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதி மறுப்பு.
*மொத்த விற்பனைகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்ளைத் திறப்பதற்கு அனுமதி.
*கடும் கட்டுப்பாடுகளுடன் வாராந்த சந்தைகளையும் திறக்க அனுமதி
*பதிவுசெய்யப்பட்ட நடமாடும் வர்த்தகர்கள், பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி