நாடாளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணகட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
பொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
அதன் பின்னர் வார இறுதி நாட்களில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்ததுவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.