நாடு முழுவதும் டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மாத்திரம் 16,497 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் 3,029 பேரும், ஜூன் மாதம் 2,997 பேரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்தாண்டு இதே காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களைவிடவும் அதிகமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் டெங்கு நோய் பரவல் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.