செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் மையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் மையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

1 minutes read

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இராணுவத்தினரால் இயக்கப்படும் 24 மணிநேர கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் மையத்தை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நேற்று முன்தின மிரவு பார்வையிட்டார்.

இதன் போது கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் உடனிருந்தார்.

இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல பணிப்பகத்தின் வழிகாட்டலுக்கமைய தேசிய தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சிப்பாய்களால் கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் ஓகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் மற்றும் பத்தரமுல்லை “தியத உயன” இராணுவ தடுப்பூசி மையத்தில் ஓகஸ்ட் (02) ஆம் திகதி தொடக்கம் புதன்கிழமை வரையில் அஸ்ட்ரா செனெகா (கொவிஷீல்ட்) தடுப்பூசிகளை 24 மணிநேரமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More