முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பூத்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.